/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : டில்லியின் நீண்டகால முதல்வர்
/
தகவல் சுரங்கம் : டில்லியின் நீண்டகால முதல்வர்
PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
டில்லியின் நீண்டகால முதல்வர்
டில்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. 8 பேர் டில்லி முதல்வராக இருந்துள்ளனர். இதில் மூன்று பேர் பெண்கள். காங்., பா.ஜ., சார்பில் தலா மூன்று, ஆம் ஆத்மியில் 2 பேர் முதல்வர் பதவி வகித்தனர். காங்கிரசின் பிரஹாம் பிரகாஷ் (1952 மார்ச் 17 - 1955 பிப். 12), டில்லியின் முதல் முதல்வராக பதவி வகித்தார். 1956 - 1993 வரை 37 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி நீக்கப்பட்டது. 1998ல் முதல்வராக பதவியேற்ற பா.ஜ., வின் சுஷ்மா சுவராஜ், டில்லியின் முதல் பெண் முதல்வர். நீண்டகாலம் (15 ஆண்டு, 25 நாள்) டில்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித் (காங்.,).