/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : கொசுவை கட்டுப்படுத்தும் உயிரினம்
/
தகவல் சுரங்கம் : கொசுவை கட்டுப்படுத்தும் உயிரினம்
PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
கொசுவை கட்டுப்படுத்தும் உயிரினம்
பூமியில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இனம் தட்டான். இவை பறக்கும் பூச்சியினங்களில் ஒன்று. மெல்லியதாக, பார்க்க அழகானது. பல வகைகள் உள்ளன. இது கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு 30 முதல் 100 கொசுக்களை தட்டான் சாப்பிடுகிறது. இது மணிக்கு 36 -54 கி.மீ., வேகத்தில் பறக்கிறது. இதன் பார்க்கும் திறன் மிக வேகமானது. இதற்கேற்ப இதன் கண்கள் வினாடிக்கு 200 படங்களை பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இது தன் மூளையின் திறனில் 80 சதவீதத்தை, பார்வைக்காக மட்டுமே பயன்படுத்துகிறது.