/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய விவசாயிகள் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய விவசாயிகள் தினம்
PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய விவசாயிகள் தினம்
மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தொழில். இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாய துறைக்கு பல சட்டங்கள், திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் முன்னாள் பிரதமர் சரண் சிங். இதை அங்கீகரிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான டிச. 23 மத்திய அரசு சார்பில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. விவசாய தொழில் இயற்கை சூழலோடு தொடர்புடையதால், இதில் பல்வேறு சவால்கள் உள்ளன.

