PUBLISHED ON : டிச 22, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இந்தியாவில் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினமான டிச. 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானது.
உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார் ராமானுஜன். ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்டவர்.

