/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : நன்னீரின் ஆதாரம்
/
தகவல் சுரங்கம் : நன்னீரின் ஆதாரம்
PUBLISHED ON : டிச 29, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நன்னீரின் ஆதாரம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனிப்பொழிவின் வேகம், நீர் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருந்தால் அங்கு பனி ஆறு உருவாகும். துருவப்பகுதிகளின் பெரும்பகுதி பனி ஆறுகளால் மூடப்பட்டிருக்கிறது. பனிக்கட்டி உருகி, புவி ஈர்ப்பு காரணமாக மெதுவாக நகரத் தொடங்குவதால் பனி ஆறு உருவாகிறது. இது நிலப்பரப்புகளில் மட்டுமே உருவாகும். குளிர்காலத்தில் உறைநிலை, கோடையில் உருகுநிலையில் காணப்படும். பனி ஆற்றின் வேகம் என்பது புவி வெப்பம், உராய்வு ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது. பூமியில் அதிகளவு நன்னீர், இந்த பனி ஆறுகளில்தான் உள்ளது.