/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய பனி சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய பனி சுரங்கம்
PUBLISHED ON : டிச 08, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய பனி சுரங்கம்
பனி குகை என்பது இயற்கையாக உருவானது. இதன் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி
செல்சியஸ்க்கு கீழ் இருக்கும். உலகின் பெரிய பனி குகை, ஆஸ்திரியாவின் சால்ஜ்பக் நகரில்
இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ளது. பெயர் 'இஸ்ரைசன்வெல்ட்'. 1879ல் கண்டறியப்பட்டது.
கடல்மட்டத்தில் இருந்து 5400 அடி உயரத்தில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுக்கு முன் 'சால்சாஜ்' ஆறு மூலம்உருவானது. நீளம் 42 கி.மீ.
இருப்பினும் முதல் ஒரு கி.மீ., துாரத்துக்கு மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். ஆண்டுதோறும் 2 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர்.