PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உயரமான அதிபர்
அமெரிக்கவில் 60வது அதிபர் தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை (நவ. 5) நடக்கிறது. 1788ல் முதல் அதிபர் தேர்தல் நடந்தது. முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இதுவரை 46 பேர் அதிபராக இருந்துள்ளனர். இதில் உயரமானவர் (190 செ.மீ.) ஆபிரகாம் லிங்கன். குள்ளமானவர் ஜேம்ஸ் மேடிசன் (162 செ.மீ.). முதல் இடது கை பழக்கமுடையவர் ஜேம்ஸ் கார்பீல்டு. எம்.பி.பி.எஸ்., முடித்த ஒரே அதிபர் வில்லியம் ஹென்றி ஹாரிசன். அதிக குழந்தைகள் (15) உடையவர் ஜான் டெய்லர். அதிபரின் இல்லத்துக்கு வெள்ளை மாளிகை என பெயரிட்டவர் தியோடர் ரூஸ்வெல்ட்.

