/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : ராணுவ பலத்தில் யார் 'டாப்'
/
தகவல் சுரங்கம் : ராணுவ பலத்தில் யார் 'டாப்'
PUBLISHED ON : நவ 15, 2025 07:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ராணுவ பலத்தில் யார் 'டாப்'
ராணுவ வீரர்கள், போர் விமானம், போர்க்கப்பல், அணு ஆயுதம், ஏவுகணை உள்ளிட்டவை அடிப்படையில் நாட்டின் ராணுவ பலம் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி 'குளோபல் பயர் பவர்' அமைப்பின் 2025 கணக்கின்படி, உலக ராணுவ பலத்தில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் முதலிடத்தில் (2024ல் ரூ.77 லட்சம் கோடி) உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஷ்யா, மூன்றாவது இடத்தில் சீனா உள்ளது. நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. ஐந்து, ஆறு, ஏழாவது இடத்தில் தென்கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளன.

