/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் சிரிப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் சிரிப்பு தினம்
PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக விலங்குகள் சிரிப்பு தினம்
பூமியில் பலவகை விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகை. விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் 'பிரான்சிஸ் ஆப் அசிசி'யின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் 1931 முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலகம் இவைகளின் வீடும் கூட' என்பது இந்தாண்டு மையக்கருத்து.