உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 25, 2026 12:22 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக 'பார்மசிஸ்ட்' தினம்
மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருத்துவ துறைக்கு உதவியாக இருக்கும் பார்மசிஸ்ட்களின் (மருந்தாளுநர்) பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக செப்.25ல் உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக பார்மசிஸ்ட்களை வலுப்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 40 லட்சம் பார்மசிஸ்ட்கள் (மருந்தாளுநர்) உள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் பெண்கள். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது இவர்களது முக்கிய பணி.
