உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 24, 2026 12:54 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக கடல்சார் தினம்
சர்வதேச சரக்கு போக்குவரத்து வணிகத்தில் 80 சதவீதம் கடல் வழியாகவே நடக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் கப்பல் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. கப்பல்கள், மாலுமிகள், அதன் பணியாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப்., நான்காவது வியாழன் (செப். 24ல்) உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கொள்கையிலிருந்து செயல்பாட்டிற்கு: கடல்சார் சிறப்பை ஊக்குவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஆக்சிஜனில் பாதி கடல் தான் தருகிறது. கடல்சார் உணவுகள் கிடைக்கின்றன. எனவே வர்த்தகத்தை போல கடலின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் அவசியம்.
