/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக மருந்தாளுனர் தினம்
/
தகவல் சுரங்கம் : உலக மருந்தாளுனர் தினம்
PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக மருந்தாளுனர் தினம்
உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருத்துவ துறைக்கு உதவிகரமாக இருப்பவர்கள் மருந்தாளுனர்கள் (பார்மசிஸ்ட்கள்). இவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சார்பில் செப்.25ல் உலக மருந்தாளுனர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பார்மசிஸ்ட்':உலக சுகாதார தேவையை பூர்த்தி செய்தல்' என்பது இந்தாண்டு மையகருத்து. உலகில் 40 லட்சம் பார்மசிஸ்ட்கள் உள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் பெண்கள். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது இவர்களின் முக்கிய பணி.