உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
8 முறை ஜனாதிபதி ஆட்சி நடந்த பீகார்
பீஹாரில் முதன்முறையாக 1952ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சுதந்திரத்துக்குப்பின் பீஹாரின் முதல் முதல்வராக ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா (1947 –1961) பதவி வகித்தார். இதுவரை 23 பேர் முதல்வராக இருந்துள்ளனர். இடையே 8 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. நீண்ட காலம் பதவி வகித்தவராக (19 ஆண்டு) தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார். குறுகிய காலம் (5 நாள்) பதவி வகித்தவர் சதீஷ் பிரதாப் சிங். ஒரே ஒரு பெண் முதல்வர் (ராப்ரி தேவி, 7 ஆண்டு, 190 நாட்கள்) மட்டுமே பதவி வகித்துள்ளார். இவர் பீகாரில் முதல்வராக இருந்த லாலு பிரசாத்தின் மனைவி
