உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 24, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அக். 24
ஐ.நா., தினம், போலியோ,
பல்வேறு போர்களால் பாதிக்கப்பட்ட உலகில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஐ.நா., சபை (1945 அக். 24) தொடங்கப்பட்டது. உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, நோய், வறுமையை ஒழிப்பது, மனித இனத்தை மேம்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதன் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக். 24ல் ஐ.நா., சபை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
* ஒரு காலத்தில் போலியோ நோய் உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருந்தது. இந்நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக். 24ல் உலக போலியோ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே ‘போலியோ'.
