உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 23, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
உலகில் 2710 – 3380 பனிச்சிறுத்தைகள் தான் உள்ளன.
இது அழியும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன என ஐ.நா., தெரிவித்துள்ளது. எனவே பனிச்சிறுத்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 23ல் சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூடான், சீனா, ஆப்கன் உள்ளிட்ட மத்திய , தெற்கு ஆசிய நாடுகளின் மலைப்பகுதிகளில் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. இதன் உயரம் 55 – 65 செ.மீ., நீளம் 90 – 115 செ.மீ., இந்தியாவில் லடாக், ஹிமாச்சல், உத்தரகண்ட், சிக்கிம், அருணாச்சலில் 400 – 500 பனிச்சிறுத்தைகள் உள்ளன.
