PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பராக்கிரம தினம்
இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது பிறந்த தினமான ஜன.23, மத்திய அரசு சார்பில் 'பராக்கிரம தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 1897ல் ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக தன் உயரிய சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினார். நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற இவரது வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே கழிந்தன.

