/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக சுகாதார அமைப்பு
/
தகவல் சுரங்கம் : உலக சுகாதார அமைப்பு
PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக சுகாதார அமைப்பு
அமெரிக்காவை தொடர்ந்து அர்ஜென்டினாவும் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஐ.நா., சபையின் கீழ் செயல்படும் துணை அமைப்புகளில் ஒன்று உலக சுகாதார நிறுவனம் . இது சர்வதேச அளவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1948 ஏப். 7ல் உருவாக்கப்பட்டது. போலியோ, மலேரியா உட்பட பல நோய்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா. தவிரடில்லி உட்பட உலகளவில் ஆறு மண்டல அலுவலகம், 150 கள அலுவலகம் உள்ளன. இதில் இந்தியா உட்பட 194 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

