உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேச, எழுத தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். இது அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 76.5 கோடி பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள். இதில் பெரும்பாலானோர் பெண்கள்.
ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப்., 8ல் சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'மக்கள், பூமி, வளர்ச்சிக்கான எழுத்தறிவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
