உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசத்தில் ஒன்று அந்தமான்.
இங்குள்ள பல தீவுகளில் ஒன்று வடக்கு சென்டீனல். பரப்பளவு 60 சதுர கி.மீ. நீளம் 7 கி.மீ. இங்கு பூர்வ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். எவ்வித சமூக, வெளியுலக தொடர்பு இல்லாமல் வாழும் உலகின் ஒரே இனம் என கருதப்படுகிறது. இது இந்திய எல்லைக்குள் இருந்தாலும், அங்கு செல்ல யாருக்கும் அரசு அனுமதி இல்லை. இவர்களும் தீவில் இருந்து வெளியே வருவதில்லை, மற்ற வெளிநபர்களையும் அனுமதிப்பதில்லை. மீறி சென்றால் அம்பு ஏவி தாக்குவர். பழங்கால உடை அணிகின்றனர். மீன், தேங்காய், தேன் உள்ளிட்டவை இவர்களது உணவு.
