உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
விவசாயிகளுக்கு வருமானம், மக்களுக்கு ஆடை, உலகளவில் வர்த்தகம் என பல வழிகளிலும் பருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகின் ஜவுளித் தேவையில் 27 சதவீதத்தை, பருத்தி பூர்த்தி செய்கிறது. 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக பருத்தி துணி உள்ளது. பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 7ல் உலக பருத்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் பருத்தி விளைச்சலில் ‘டாப்–3’ இடத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளன. ‘நன்மைக்கான பருத்தி: வர்த்தகம், மாற்றம், கூட்டாண்மை வழி வளத்தை கட்டமைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
