உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
உணவு, உடை, குடிநீர், இருப்பிடம், கல்வி, வேலைாய்ப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்பு கிடைக்க பெறாதவர்கள், வறுமையானவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
உலகில் 83 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் (தினசரி ரூ.190க்கு கீழ் பெறுபவர்) உள்ளனர். உலகில் 280 கோடி பேருக்கு பாதுகாப்பான வீடுகள் இல்லை. வறுமையால் பாதிக்கப்பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்சின் ஜோசப் ரெசின்கி. இவரது முயற்சியால் 1987 முதல் ஐ.நா., சார்பில் அக்.17ல் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘அனைவருக்கும் பாதுகாப்பான வீடு’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
