PUBLISHED ON : ஜூன் 18, 2026 07:26 AM

தன் மீது வந்து அமரும் பூச்சிகளை லபக்கென்று பிடித்துக்கொள்ளக்கூடியது 'வீனஸ் ப்ளை டிராப்' என்ற செடி. இலை விளிம்பில் பற்கள் போன்ற அமைப்பு கொண்ட இந்தத் தாவரம், எப்படி ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தன் இரையை பிடிக்கிறது? பல ஆண்டுகளாக புதிராகவே நீடித்த இந்தப் புதிரை தற்போது ஜெர்மனியிலுள்ள ப்ரைபர்க் பல்கலை ஆய்வாளர்கள் விடுவித்துள்ளனர்.
இதற்கென அதிவேக இமேஜிங், கணினி மாதிரியாக்கம் மற்றும் சோதனைகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். வீனஸ் பிளை ட்ராப்பின் இரு மடல்களும், 'ஸ்பிரிங்' போன்ற அமைப்பாகச் செயல்படுவதைக் குழுவினர் கண்டறிந்தனர். இத் தாவரத்திற்குள் உணர்திறன் அதிகமுள்ள முடிபோன்ற அமைப்பு உள்ளது. இவற்றை பூச்சிகள் தொடும்போது, சேமிக்கப்பட்ட மீள் ஆற்றல் வேகமாக வெளிப் பட்டு, இலைகள் திறந்த நிலையிலிருந்து மூடிய நிலைக்கு மாறுகின்றன.
நரம்புகளோ, தசைகளோ இல்லாத போதி லும், இந்த மாமிச உண்ணித் தாவரம் எவ்வாறு இரையைப் பிடிக்கிறது என்பதை விளக்க இந்த ஆய்வு உதவுகிறது. இந்தத் கண்டு பிடிப்புகள் மென்மையான ரோபோக்கள், எதிர்வினையாற்றும் பொருட்கள் மற்றும் ஆற்றல் திறன்மிக்க இயந்திர அமைப்புகளை வடிவமைக்க உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இயற்கை பெரும்பாலும், சிக்கலான பிரச்னை களுக்கு வியக்கத்தக்க எளிய வடிவமைப்புகள் மூலம் தீர்வுகளை வழங்கு கிறது. வீனஸ் தாவரத்தின் மின்னல் வேக இயக்கம் நமக்கு ஒன்றைப் புரியவைக்கிறது. மனிதர்கள் இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கு வதற்கு முன்பே, இயற்கையின் பொறியியல் வடிவமைப்பு எவ்வளவு நேர்த்தியாகப் பரிணமித்துவிட்டது!
