PUBLISHED ON : ஜூன் 18, 2026 07:27 AM

மனிதர்களுக்குக் காயம் ஏற்பட்டால் வலியால் துடிப்பர். அதேபோல், வெட்டுக்கிளி உள்ளிட்ட பூச்சிகளுக்கு, காயம் படு மானால் வலிக்குமா? லண்டனிலுள்ள குவீன் மேரி பல்கலை ஆய்வுக ளின்படி, அவை வலி போன்ற ஒரு நிலையை அனுபவிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக பாலுாட்டி களுக்கும், முதுகெலும்புள்ள விலங்கு களுக்கும் மட்டுமே வலியுணர்வு உண்டு என்ற கருத்து கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
காயமடைந்த பூச்சிகளுக்கு, தொடு உணர்திறன் அதிகரிப்பதையும், லேசான துாண்டுதலுக்குக்கூட மிக வலுவாக எதிர்வினை ஆற்றுவதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த மாற்றங்க ள், காயம் ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தைத் தாண்டியும் நீடித்தது. இது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளில் வலியோடு தொடர் புடைய, 'உணர்திறன் அதிகரிப்பு' (sensitisation) போன்ற நரம்பியல் விளைவை ஒத்திருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, பூச்சிகள் மனிதர்களைப் போலவே வலியை உணர்கின்றன என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை. ஏனெனில் எந்தவொரு உயிரினத்திலும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை அளவிடுவது கடினம். இருப்பினும், அறிவியல் முன்பு கணித்ததை விட, பூச்சிகள் காயம் குறித்து மிகவும் சிக்கலான நரம்பியல் எதிர்வினைகளைக் கொண்டுள்ளன என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
பல்வேறு முதுகெலும்பில்லாத உயிரினங்களிலும் இதேபோன்ற வலியுணர்வு இருப்பதற்கான ஆதாரங்கள் பெருகிவருகின்றன. இதனால், விஞ்ஞானிகள் வெகுகாலமாக கேட்கப்பட்டு வரும் ஒரு கேள்வியை மீண்டும் ஆராயத் துவங்கியுள்ளனர்: 'துன்பத்தை அனுபவிக்கும் திறன், துல்லியமாக எந்த உயிரினத்தில் தொடங்குகிறது?'
