/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மனிதனுக்கு முன்பே இயற்கை உருவாக்கிய அணு உலை
/
மனிதனுக்கு முன்பே இயற்கை உருவாக்கிய அணு உலை
PUBLISHED ON : ஜன 15, 2026 08:31 AM

பூமி தனது முதல் அணு உலையை, மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இயக்கியுள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காபோன் நாட்டில், ஓக்லோ என்ற பகுதியில், 170 -- 180 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையான அணு உலைகள் உருவாகி செயல்பட்டுள்ளன. கடந்த 1972-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அப்பகுதியில் கிடைத்த யுரேனியத் தாதுக்களில் இருந்த மாற்றங்களைக் கொண்டு இது உறுதிப்படுத்தப்பட்டது.
அங்குள்ள தாதுக்களில் அணுக்கருப் பிளவுக்குத் தேவையான 'யு-235' ஐசோடோப் செறிவாக இருந்ததே இதற்குக் காரணம். நிலத்தடி நீர் ஒரு கட்டுப்படுத்தும் ஊடகமாக செயல்பட்டு இந்த அணுவினையைத் தூண்டியது. நீர் புகும்போது வினை துவங்குவதும், அது கொதித்து ஆவியானதும் வினை நின்றுபோவதுமாகப் பல லட்சம் ஆண்டுகள் இந்தச் சுழற்சி நீடித்துள்ளது என ஒரு பன்னாட்டு ஆராய்ச்சியாளர் குழு கண்டறிந்துள்ளது.
இதுவரை 15 இயற்கை அணு உலைகள் கபோன் நாட்டில் கண்டறியப் பட்டுள்ளன. நவீன அணு உலைகளுடன் ஒப்பிடும்போது இவை உருவாக்கிய ஆற்றல் ரொம்பக் குறைவுதான். இருப்பினும், அந்த வினை களினால் உருவான அணுக்கழிவுகள் பல கோடி ஆண்டுகளாகப் பாறைகளுக்கு அடியில் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, கபோன் ஒரு சிறந்த இயற்கை ஆய்வகமாகத் திகழ்கிறது.

