sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

வழிகாட்டும் இயற்கை ஒளி

/

வழிகாட்டும் இயற்கை ஒளி

வழிகாட்டும் இயற்கை ஒளி

வழிகாட்டும் இயற்கை ஒளி


PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு நேரச் சாலைகளில் பயணம் செய்யும்போது சாலை ஓரங்கள், நடுக்கோடுகள் ஆகியவை நம் வாகனத்தின் ஒளி பட்டவுடன் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். எல்லா இடங்களிலும் மின் விளக்கு பொருத்த மின்சாரம் அதிகளவு தேவைப்படும். அதைக் குறைக்கவே இவ்வாறான ஒளிரும் பெயின்ட்கள் பயன்படுகின்றன. ஆனால் இவை, ஒளி படாவிட்டால் ஒளிராது. நடந்து செல்பவர்களுக்கு உதவாது. இதை மனத்தில் வைத்தே ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இயற்கை வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

சில வகை காளான்கள் மரங்களில் உள்ள சத்துக்களை உண்டு ஒளிரும் இயல்பைக் கொண்டுள்ளன. இவற்றைச் சாலை ஓரங்களில் வளர்க்கலாம் என்று முடிவு செய்தனர். பஸ்லா மரம் (Balsa wood) எனும் மரத்தின் துண்டுகளையும், தேன் காளானையும் (டெசார்மில்லாரியா டேபெஸ்கென்ஸ்) இணைத்து இதை உருவாக்கி உள்ளனர். இவை 10 நாட்கள் தொடர்ந்து 560 நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட அழகிய பச்சை நிறத்தில் ஒளிரும்.

காளானையும், மரக்கட்டையையும் மூன்று மாதங்கள் ஈரப்பதமுள்ள சூழலில் வளர விட்டனர். மரக்கட்டை தன் எடையை விட 8 மடங்கு அதிக நீரை உறிஞ்சிக் கொண்டது. இதன்மீது ஆக்சிஜன் பட்டதும் ஒளிர்ந்தது. லுாசிபெரேஸ் எனும் நொதி தான் இந்த ஒளிர்வுக்குக் காரணம். இதை வீடு, வணிக வளாகங்களில் அழகுக்காகவும் வைத்துக்கொள்ளலாம். இதே போல் உயிருள்ள தாவரங்களை இந்தமுறையில் ஒளிர வைக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அவ்வாறு செய்தால், மின்விளக்குகள் பயன்பாட்டை ஓரளவு குறைக்கலாம்.






      Dinamalar
      Follow us