sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

அறிவியல் மலர்

/

கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?

/

கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?

கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?

கண்ணாடி பாட்டிலில் எப்படி பிளாஸ்டிக் வந்தது?


PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. பிரான்சில் நடந்த ஓர் ஆய்வில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

குளிர்பானங்கள், ஐஸ் டீ, பீர், எலுமிச்சைச் சாறு போன்ற கண்ணாடிப் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களில், லிட்டருக்கு ஏறத்தாழ 100 நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது அசல் பிளாஸ்டிக்காலான பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் இருக்கும் பிளாஸ்டிக் நுண் துகள்களை விட கணிசமாக அதிகம். இந்த நுண்துகள்கள் எப்படி கண்ணாடி பாட்டில்களில் வர முடியும்?

ஆய்வில் தெரியவந்தது இதுதான்: பாட்டில்களில் இருக்கும் உலோக மூடிகளின் மேல் பூசப்பட்டுள்ள அலங்காரப் பெயின்ட் கரைந்து கலப்பதே இந்த மாசுக்கு முக்கியமான காரணம்.

பாட்டில் மேல்மூடியை அடைக்கும் முன், மூடிகளை காற்றால் ஊதி கழுவுவதன் வாயிலாக, இந்த துகள்களின் எண்ணிக்கையை 60 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

கார்க் எனப்படும் தக்கையால் மூடப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் உள்ள தண்ணீர் மற்றும் ஒயின்களில் மிகக் குறைந்த அளவே நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள், தயாரிப்பாளர்கள் மூடிகளை கூடுதல் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.






      Dinamalar
      Follow us