/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பழமையான தொல்லெச்சம் கண்டுபிடிப்பு
/
பழமையான தொல்லெச்சம் கண்டுபிடிப்பு
PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

டைனோசர் எனும் உயிரினம் வாழ்ந்தது என்பதை தொல்லெச்சங்கள் மூலமே அறிந்து கொண்டோம். இந்த டைனோசர்களுக்கு 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் ஒன்றின் தொல்லெச்சத்தை, தற்போது கனடாவைச் சேர்ந்த டொராண்டோ பல்கலை ஆய்வாளர்கள் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடித்துள்ளனர். இது 28.6 - 28.9 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தொல்லெச்சங்களில் நமக்கு எலும்புகள் தான் பெரும்பாலும் கிடைக்கும். ஏனென்றால் அவை தான் சுலபத்தில் மக்காது. ஆனால் தற்போது கிடைத்துள்ளது தோல். இந்தத் தோல் செதில்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இது பாம்பின் தோலாகவோ, முற்காலத்தில் வாழ்ந்த முதலையின் தோலாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
விலங்கு இறக்கும்போது தோல் மண்ணில் புதையும். அது அழுகுவதற்குள், அந்த மண் இறுகிய நிலையில் கல்லாக மாறிவிட வேண்டும். அப்போது தான் தோல் தொல்லெச்சமாகக் கிடைக்கும். தற்போது கிடைத்துள்ளதும் அப்படித்தான். களிமண்ணில் புதைந்திருந்தது. இது கிடந்த குகைக்கு அருகே இயற்கையாக ஹைட்ரோகார்பன் நிறைந்திருப்பதால் தோல் இவ்வளவு காலம் கெடாமல் இருந்துள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.