பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்: ராணுவ வீரர் 7 பேர் பலி
ADDED : அக் 17, 2025 10:46 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நீண்ட காலமாக இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஆதரிக்கும் பாகிஸ்தான், அதன் மோசமான பின்விளைவுகளை இப்பொழுது எதிர்கொள்வதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு நாடுகளும் 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.