வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை: புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை: புதிய அரசியல் சாசனத்திற்கு எதிர்ப்பு
ADDED : அக் 17, 2025 10:26 PM

டாக்கா: புதிய அரசியல் சாசனத்தை எதிர்த்து வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் விரட்டியடித்தனர்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் தற்போது ,இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது. இந்த இடைக்கால அரசு இன்று(அக்.17) புதிய அரசியல் சாசனத்தை வெளியிட்டது.
இந்த சாசனத்தை எதிர்த்து அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்நாட்டின் பார்லி. வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் இறங்கினர்.
அப்போது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைய மறுக்கவே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் தங்கியிருந்த கூடாரங்களையும் சேதப்பபடுத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.