PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

01. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி யுரேனஸ் கிரகத்தின் படங்களை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இந்தத் தரத்தைப் பரிசோதித்த விஞ்ஞானிகள் இனி நம்மால் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களையும் இவ்வாறு துல்லியமாகப் படம் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
![]() |
02. சனிகோளைச் சுற்றி வளையங்களும், பல துணைக்கோள் இருப்பதையும் நாம் அறிவோம். ஆனால், முதன்முறையாக விஞ்ஞானிகள் சனி, சூரியனைச் சுற்றி வரும் அதே பாதையில், சுற்றி வருகின்ற ஒரு விண்கல்லைக் கண்டறிந்துள்ளனர்.
![]() |
03. கோண்டுவானாக்ஸ் பாரைசென்சிஸ் (Gondwanax paraisensis) என்பது ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, நான்கு கால் உயிரினம். தோராயமாக ஒரு சிறிய நாயின் அளவு இருக்கும். அதாவது 1 மீட்டர் நீளமும், 3 முதல் 6 கிலோ எடையும் கொண்டது. 23.7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட இதனுடைய தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
04. தங்களுடைய நட்சத்திரத்துக்கு, மிக அருகில் சுற்றி வரும், புதிய கோள்களை சீன விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இவற்றில் நான்கு, பூமியை விடச் சிறியவை, அதாவது சராசரியாக செவ்வாய் கிரகத்தின் அளவை உடையவை.
![]() |
05. இன்று (அக்டோபர் 17) வியாழக்கிழமை நம்முடைய நிலவு வழக்கத்திற்கு மாறாக பெரிதாகவும் பூமிக்கு அருகிலும் தோன்ற உள்ளது. இந்த சூப்பர் நிலவை 'ஹன்டர்ஸ் மூன்' என்பார்கள். இந்தியாவில் அதிகாலை 4:26 மணியிலிருந்தே இதைப் பார்க்க முடியும்.





