PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

01. ஜெர்மனிய விண்வெளி ஆய்வு மையமும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து சோஃபியா (SOFIA) எனும் வானுார்தியை இயக்குகின்றன. இதில் ஒரு தொலைநோக்கி உள்ளது. ஐரிஸ், மசாலியா ஆகிய இரண்டு விண்கற்கள் முறையே 199 கி.மீ., 135 கி.மீ., விட்டம் கொண்டவை. இரு விண்கற்களிலும் தண்ணீர் மூலக்கூறு இருப்பதைத் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
02. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்பவை பொன்னிறத் தவளைகள். இவற்றின் விலங்கியல் பெயர் 'ஹைலாரானா இன்டர் மீடியா'. இந்த வகை தவளை ஒன்றன் முதுகில் காளான் வளர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறந்த பொருட்கள் மீது வளரும் காளான், உயிருள்ள தவளை மீது வளர்வது கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
![]() |
03. சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தகடுகள் பெரும்பாலும் தட்டையாகவே வடிவமைக்கப்படுகின்றன. இதனால், சில நேரங்களில் தகடுகளின் சில பகுதிகளில் சூரிய ஒளி விழுவதில்லை. துருக்கி நாட்டைச் சேர்ந்த அப்துல்லா குல் பல்கலை விஞ்ஞானிகள் தகடுகளை அரைக்கோள வடிவில் வடிவமைத்தால் அதிகமான சூரிய ஒளியை மின்சாரமாக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
![]() |
04. ஞாபக மறதி நோயான 'அல்சைமர்' ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும்
அறியப்படவில்லை. சுவீடன் நாட்டைச் சேர்ந்த அப்சலா பல்கலையைச் சேர்ந்த
விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த நோய் ஏற்படுவதற்கு 'ஹெர்பஸ்
சிம்ப்ளக்ஸ்' எனும் வைரஸ் ஒரு காரணம் எனக் கண்டறியப்பட்டு உள்ளது.