PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

1. தென் கொரிய விஞ்ஞானிகள் கண்ணாடி போன்ற புற ஊதாக் கதிர் உணர்வான்களை உருவாக்கியுள்ளனர். இதை ஆடை, அணி கருவிகளுடன் ஒட்டிக்கொள்ள முடியும். வெயில் அபாய அளவை எட்டும் முன், இந்த உணர்வான் ஸ்மார்ட்போனுக்கு எச்சரிக்கை அனுப்பும். இதன் வாயிலாக சருமத்திற்கு கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
![]() |
2. மியான்மரில், ஒரு கட்டட வடிவமைப்புக் குழுமம் வடிவமைத்த 26 மூங்கில் வீடுகள் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போதும் உறுதியாக நின்றன. வளைந்துகொடுக்கும் தன்மை உடைய மூங்கிலை வைத்து வீடுகட்ட, டிஜிட்டல் வடிவமைப்பு முறையை இந்நிறுவன வல்லுநர்கள் பயன்படுத்தினர்.
![]() |
3. அமேசானின் இணைய சேவை கள் மின்கோளாறால் நின்றது. இதையடுத்து, ஒரு சிறிய அணுமின் நிலையத்தை உருவாக்க உள்ளது. எக்ஸ் எனர்ஜி நிறுவனம், எக்ஸ்.இ.,- 100 என்ற சிறிய அணு உலைகளை தயாரித்து உள்ளது. அதில் 12 மினி உலைகளை வாங்கி சுமார் 1 ஜிகாவாட் மின்சாரத்தை தயாரித்து பயன்படுத்த, அமேசான் திட்டமிட்டுள்ளது.
![]() |
4. எறும்புகளுக்கு எப்படி துல்லியமான வாசனை உணர்வு வந்தது என்ற ரகசியத்தை ராக் பெல்லர் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு வாசனை நரம்பணுவும், நுாற்றுக்கணக்கான வாசனை அறியும் மரபணுக்களில் ஒன்றை மட்டுமே வெளிப்படுத்துமாறு சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்கிறது. இதற்காக, அருகிலுள்ள மற்ற மரபணுக்களைச் செயலிழக்கவும் செய்துவிடுகிறது. எனவேதான், எறும்புகளால் குழப்பமடையாமல் பலவித வாசனைகளை பிரித்து உணர முடிகிறது.




