/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
ஓர் ஆன்மிக ஆல்பம்: திருமலை தீர்த்தங்களில் நீராடலாம்!
/
ஓர் ஆன்மிக ஆல்பம்: திருமலை தீர்த்தங்களில் நீராடலாம்!
ஓர் ஆன்மிக ஆல்பம்: திருமலை தீர்த்தங்களில் நீராடலாம்!
ஓர் ஆன்மிக ஆல்பம்: திருமலை தீர்த்தங்களில் நீராடலாம்!
PUBLISHED ON : அக் 30, 2024

ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் இருப்பிடமான திருமலையில் உள்ள ஒவ்வொரு கல், மரம், மண்ணும் தெய்வீகத்தன்மை வாய்ந்தவையே. இந்த திருத்தலத்தில் பிரம்ம புராணம், ஸ்கந்த புராணத்தின்படி சுமார் 66 கோடி புனித தீர்த்தங்கள் உள்ளது.
தர்மராதிபிரதா, ஞானப்பிரதா, பக்தி வைராக்யபிரதா, முக்திபிரதா என இத்தீர்த்தங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.தர்மராதிபிரதா தீர்த்தங்களில் நீராடினால் முக்தி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. ஆன்மிக ஒழுக்கத்துடன் இணைந்து ஒரு தார்மிக வாழ்க்கையை நடத்தும் நபரை இது நெறிப்படுத்தும்.
ஞானபிரதா தீர்த்தங்களில் நீராடுவது ஞானப்பாதையை திறந்து வைக்கும். பக்தி வைராக்கிய தீர்த்தங்களில் நீராடுவது பக்தி யோகத்திற்கு வழிவகுக்கும். முக்திபிரதா தீர்த்தங்களில் நீராடினால் முக்தி கிடைக்கும்.
இந்த தீர்த்தங்கள் பலவும் கண்ணுக்கு தெரியாமல் உள்ளது; அதிலும் பல தீர்த்தங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும் நீராடுவற்கு சாத்தியம் இல்லாத இடத்தில் உள்ளது.சில தீர்த்தங்களில் நீராடுவதற்கு கோயில் நிர்வாகம் வசதி செய்து கொடுத்துள்ளது. பாபவினாசனம் தீர்த்தத்தில் வருடம் முழுவதும் நீராடலாம்.
ஆகாசகங்கா என்பது கொஞ்சம் மலைப்பாங்கான இடத்தில் உள்ளதாகும். இங்கு சித்ரா பவுர்ணமி நாளில் நீராட மக்கள் அதிகம் செல்கின்றனர். தும்புரு தீர்த்தம் என்பது காட்டுப்பகுதிக்குள் உள்ளது. இங்கு ஏப்ரலில் நடைபெறும் தும்புரு தீர்த்த முக்கொடி திருவிழாவின் ேபாது பலரும் நீராடுகின்றனர். இதே போல குமாரதாரா, ராமகிருஷ்ணா, சக்ரதாரா தீர்த்தங்களிலும் நீராடி வருகின்றனர்.
இப்படி ஒவ்வொரு தீர்த்தமாக சென்று நீராட, பக்தர்கள் சிரமப்படுவதை உணர்ந்த வெங்கடேஸ்வர பெருமாள், மலைக்கோயிலுக்கு அருகே உருவாக்கிய தீர்த்தக்குளம் தான் புஷ்கரணி. இந்த ஒரு தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய பலனை பெறலாம் என வகுத்தும் வைத்தார்.
இதன் காரணமாக பிரம்மோற்ஸவ விழாவின் நிறைவு நாளான்று வெங்கடேஸ்வர பெருமாளே இந்தப் புஷ்கரணியில் தீர்த்தமாடுவார். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீராடி புண்ணியம் பெறுவர். இந்த நாளில்தான் நீராடிப்பலன் பெறவேண்டும் என்பதில்லை; எந்நாளில் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்நாளில் நீராடலாம்.

