/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
தீபாவளிக்காக 10 நாள் மட்டும் திறக்கும் கோயில்
/
தீபாவளிக்காக 10 நாள் மட்டும் திறக்கும் கோயில்
PUBLISHED ON : அக் 30, 2024
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடக மாநிலம் ஹசன் நகரின் நடுவில் உள்ளது ஹசனாம்பா கோயில். இந்த அம்மனின் பெயரால் ஊருக்கும் ஹசன் எனப் பெயர் வந்தது. 12ம் நுாற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில் சுயம்பு வடிவில் அம்மன் இருக்கிறாள். தீபாவளியை ஒட்டி 10 நாள் மட்டும் கோயில் திறக்கப்படும். அப்போது கடந்த ஆண்டு ஏற்றிய நெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். நைவேத்யமாக வைத்த அன்னம், பலகாரங்கள், தீர்த்தம் அப்படியே இருக்கும்.
பூமாலை வாடாமலும், நைவேத்யம் கெடாமலும் இருக்கும் அதிசயம் இங்கு நடக்கிறது. 24 மணி நேரமும் அம்மனை தரிசிக்கலாம். பெங்களூருவில் இருந்து ஹசன் 184 கி.மீ.,.

