PUBLISHED ON : ஜன 18, 2011
வெற்றுக்கண்களால் சூரியனை பார்க்க முடியாது. கண்கள் கூசும். உதயம், மறையும் வேளையில் இளஞ்சூரியனைக் காணலாம். தோல் மற்றும் கண்ணுக்குத் தேவையான சத்துகள் சூரியனில் இருந்து கிடைக்கிறது. இதனாலேயே 'சன்பாத்' என்னும் பெயரில், சூரியஒளியை உடலில் படரவிட்டு பயன் பெறுகின்றனர். உயிர்ச்சத்தான வைட்டமின்'டி' சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆன்மிகரீதியாக மட்டுமில்லாமல் அறிவியல் உலகிலும் சூரியனின் பங்கு முக்கியமானது.
நடுத்தரவகை நட்சத்திரமாக விளங்கும் சூரியன் நெருப்புப் பிழம்பாக வெப்பத்தை உமிழ்ந்தபடி இருக்கிறது. அதில் அணுப்பிளவு நிகழ்ந்த வண்ணமிருக்கும். பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு பெரியது. அதன் விட்டம் 13 லட்சத்து 91ஆயிரத்து 980 கி.மீ.,. காற்று வீசுவதற்கும், மழை பெவதற்கும் காரணம் சூரியனே. 8.5 நிமிடத்தில் சூரியஒளி பூமியை வந்தடைகிறது.
சூரியனை நிரப்ப வேண்டுமானால் 440 பூமிப்பந்துகள் தேவைப்படும். சூரியஒளி நொடிக்கு 1லட்சத்து 86 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாகிறது. சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.

