sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

சென்னையில் சூரியத்தலம்

/

சென்னையில் சூரியத்தலம்

சென்னையில் சூரியத்தலம்

சென்னையில் சூரியத்தலம்


PUBLISHED ON : ஜன 18, 2011

Google News

PUBLISHED ON : ஜன 18, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரியனின் இன்னொரு பெயரான 'ஞாயிறு' என்னும் பெயர் கொண்ட ஊரிலுள்ள புஷ்பரதேஸ்வரரை வழிபட்டால் அனைத்துப் பணிகளிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்னை அருகில் இத்தலம் உள்ளது.



தல வரலாறு:

சூரிய பகவானின் மனைவி சமுக்ஞாதேவி, கணவரின் வெப்பம் தாங்காமல் தன் நிழலில் இருந்து தன்னைப்போலவே ஒருத்தியை உருவாக்கினாள். அவளுக்கு 'சாயாதேவி' என்ற பெயர் வந்தது. அவளை சூரியனுடன் வாழச் செதுவிட்டு, தந்தை வீடு சென்றுவிட்டாள். எமதர்மன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரக் கிளம்பினார். அப்போது அவர் சிவபூஜை செயவே, வானத்தில் தோன்றிய ஒரு ஜோதி இங்குள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலருக்குள் ஐக்கியமானது. ஜோதியின் நடுவில் தோன்றிய சிவன், அவரது உக்கிரத்தை குறைத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார்.



பிற்காலத்தில், சோழ மன்னன் ஒருவன் இவ்வழியே சென்றபோது, தடாகத்தில் தாமரை மலர் மின்னியதைக் கண்டான். அதைப் பறித்த போது அவனது பார்வை பறிபோனது. வருந்திய மன்னன் சிவனை வேண்ட, சுவாமி அவனுக்கு பார்வை கொடுத்தருளினார். மேலும், அந்த தாமரைக்குள் லிங்க வடிவில் இருப்பதை உணர்த்தினார். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான் மன்னன். புஷ்பத்தில் (பூ) தோன்றியதால் சிவன், 'புஷ்ப ரதேஸ்வரர்' எனப்பட்டார். சூரியன் வழிபட்டதால் இவ்வூருக்கு அவரது மற்றொரு பெயரான 'ஞாயிறு' என்று சூட்டினர்.



சூரிய வழிபாடு

புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி சூரியன் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் வாரத்தில் ஒருநாள் சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அன்று சூரியக்கதிர் அபிஷேகம் இயற்கையாகவே நடப்பதால், உச்சிக்காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செவதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொங்கலன்றும் சூரியனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.



சூரியன் தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. மற்ற கிரகங்களால் தோஷம் உள்ளவர்கள் சூரியனுக்குரிய சிவப்பு வஸ்திரத்தை சிவனுக்கு சாத்தி வழிபடுகின்றனர். தம்பதியர், ஒற்றுமையுடன் வாழ சூரியனுக்கு கோதுமைப்பொங்கல், கோதுமை பாயாசம் படைக்கின்றனர். பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் நெய்விளக்கு ஏற்றுகிறார்கள்.



பல் நோய் தீர்க்கும் முனிவர்:

பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செயும் விதமாக, இவர் இவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, கால பைரவர், கமல விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியே சூரிய புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது.



இருப்பிடம்:

சென்னை கோயம்பேட்டில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள செங்குன்றம் சென்று, அங்கிருந்து 13 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பஸ் செல்கிறது.திறக்கும் நேரம்: காலை 7.30- 11 மணி, மாலை 4.30- 7.30 மணி. ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை.போன்: 044- 2902 1016.








      Dinamalar
      Follow us