/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
ஆயுசு வரை பால் தரும் கோமாதா - பசு பற்றி காஞ்சிப்பெரியவர்
/
ஆயுசு வரை பால் தரும் கோமாதா - பசு பற்றி காஞ்சிப்பெரியவர்
ஆயுசு வரை பால் தரும் கோமாதா - பசு பற்றி காஞ்சிப்பெரியவர்
ஆயுசு வரை பால் தரும் கோமாதா - பசு பற்றி காஞ்சிப்பெரியவர்
PUBLISHED ON : ஜன 15, 2012
'அம்மா' என்று குரல்கொடுப்பது பசு. ஆனால், அந்தப் பசு நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அதுபோல, நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆகியவையும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. நம்முடைய ஆயுசின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய்பால் தருகிறாள் என்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே உத்தமமான தாய்க்கு ஈடாக, பசுவை, 'கோமாதா' என்று சொல்கிறோம். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனகமாதா என்போம். அதே மாதிரி கோமாதாவும் இருக்கிறாள். பூமிக்குள் இருந்து காய்கறி, பழம், உலோகங்கள் தரும் தாயை 'பூ மாதா' என்கிறோம். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும், அன்பே உருவமான துமான தாயன்பை, மாத்ருத்வம் என்னும் தாய் தத்துவத்தைக் கண்டு, நம்முடைய முன்னோர் கோமாதா என்றும், பூமாதா என்றும் சொன்னார்கள்.

