sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!

/

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!


PUBLISHED ON : ஜன 15, 2012

Google News

PUBLISHED ON : ஜன 15, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

மாட்டுப்பொங்கலான இன்று பாலகிருஷ்ணரை தியானித்து இதனைப் பாராயணம் செய்தால் நற்பலன் உண்டாகும்

* மேலான கடவுளே! அனைத்து உயிர்களின் உள்ளும் புறமும் வீற்றிருப்பவனே! மாயையில் இருந்து விடுவிப்பவனே! யாரும் அறியமுடியாத அதிசயமானவனே! அழிவற்றவனே! ஞானம் நிறைந்தவனே! பக்தியோகம் அறியாத நான் உம்மை வணங்குகிறேன்.

* வசுதேவரின் பிள்ளையே! தேவகியின் வயிற்றில் உதித்தவனே! நந்தகோபரின் குமாரனே! பசுக்களைப் பரிபாலனம் செய்தவனே! கிருஷ்ணனே! உம்மை பலமுறை வணங்குகிறேன்.

* நாபிக்கமலம் கொண்டவனே! தாமரை மாலை அணிந்தவனே! தாமரை மலரைப் போன்ற

கண்களைக் கொண்டவனே! பத்மரேகை அமைந்த திருப்பாதங்களைக் கொண்டவனே! உம்மை சரணடைகின்றேன்.

* சிறையில் வாடிய தேவகியைக் காத்தவனே! அரக்குமாளிகையில் நெருப்பிட்டபோது பாண்டவர்களைக் காத்தவனே! திரவுபதியின் மானத்தைக் காத்த தயாபரா! ஜகத்குருவான கிருஷ்ணா! பிறவிச்சுழலில் இருந்து காத்தருள்வாயாக.

* பற்றற்ற ஞானியர் நெஞ்சில் குடிகொண்டவனே! முகுந்தனே! வசுதேவனே! கிருஷ்ணா! அடக்கம் கொண்ட நல்லவர்களால் மட்டும் அடையத் தக்கவனே! ஏழைகளையும், நல்லவர்களையும் சொத்தாக நினைப்பவனே! மோட்சத்தை அருள்பவனே! உம் திருவடியில் அடைக்கலம் புகுந்துவிட்டேன். காத்தருள்வாயாக.






      Dinamalar
      Follow us