sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

வரலாறு காட்டும் குன்றக்குடி குடைவரை கோயில்

/

வரலாறு காட்டும் குன்றக்குடி குடைவரை கோயில்

வரலாறு காட்டும் குன்றக்குடி குடைவரை கோயில்

வரலாறு காட்டும் குன்றக்குடி குடைவரை கோயில்


PUBLISHED ON : ஜன 14, 2017

Google News

PUBLISHED ON : ஜன 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோயில்கள் முன்னர் மரங்கள், சுதைகள், கற்றாளி... என்று பல முறைகளில் அமைக்கப்பட்டன. அதில் குடைவரை கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருப்பணிகள் இல்லாமல் காலங்களைக் கடந்து நிற்கின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் பிள்ளையார்பட்டி, திருக்கோளக்குடி, மகிபாலன்பட்டி, பிரான்மலை, குன்றக்குடி, என பல இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன. அதில் மிகவும் சிறப்பானது குன்றக்குடி குடைவரைக் கோயில். இங்குள்ள மலைக்கோயிலைத் தான் பலருக்கும் தெரியும்.

மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் 'கீழைக் கோயில்கள்' எனப்படும் குடைவரைக் கோயில்கள் நான்கு உள்ளன. திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த இக்கோயில்கள், மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கீழக் கோயிலின் முகப்பில் உள்ள மண்டபம் அழகிய தூண்களால் ஆனவை. கி.பி.15ம் நூற்றாண்டில் வெங்களப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. முன் மண்டபத்தை அடுத்துச் சென்றால் வரிசையாக சுந்தரேசுவரர், அண்ணாமலையார்,

மலைக்கொழுந்துநாதர், சண்டேசுவரர் ஆகிய நான்கு குடைவரைக் கோயில்கள் உள்ளன. கவரும் புடைப்பு சிற்பங்கள் இங்குள்ள சிவலிங்கங்கள், தூண்கள், கருவறைகள், புடைப்புச் சிற்பங்கள் மலையில் குடைந்து செதுக்கப்பட்டவை.

இந்த சிவலிங்கங்களில் தேனாற்றுநாதர் எனப்படுபவர் அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட சுயம்பு மூர்த்தி ஆவார்.

மலைக்கொழுந்துநாதர் கோயிலில் உள்ள பாலமுருகன், துவாரபாலகர், திருமால், கருடாழ்வார், நான்முகன், சிவபெருமான், திருமால், கருடாழ்வார், மகிசாசூரமர்த்தினி, சங்கரநாராயணர், ஆடல் வல்லான், துவாரபாலகர்,வலம்புரி விநாயகர் ஆகிய வண்ண வேலைப்பாடுள்ள புடைப்புச் சிற்பங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பழமையான கல்வெட்டுக்கள் இங்கு சிற்பங்கள் மட்டுமின்றி, கல்வெட்டுக்களும் குவிந்துள்ளன.

அதில் கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் குறிப்பிடத்தக்கவை. சிந்துவெளி முத்திரைகளில் படிக்கப்பட்ட இயற்பெயர்கள்

இக்கல்வெட்டுக்களில் ஒத்துப்போவதாக வரலாறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், முதலாம் ராஜராஜசோழன், முதற் குலோத்துங்கன், சடையவர்மன், பல்லவதேவன், ஸ்ரீ விக்கிரமபாண்டிய தேவர், மூன்றாம் குலோத்துங்கன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது ஆட்சிக் கால கல்வெட்டுக்கள் கோயிலின் பழமை,நிலக் கொடை, நிவந்தம், உத்தரவு...என்று பல தகவல்களைத் தருகின்றன.

அவற்றில், குன்றக்குடி 'திருக்குன்றக்குடி,தென் புகலூர்' என அழைக்கப் பெற்றதும், 8ம் நூற்றாண்டிலிருந்து சிறப்பு பெற்றதும், முதலாம் ராஜராஜசோழன் பெருவெற்றியும், மாறவர்மன் சுந்தரபாண்டியன் வென்ற சோழ நாட்டை அடைக்கலம் கேட்ட சோழ மன்னனிடம் மீண்டும் வழங்கியதால் 'சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டியத் தேவர்' என்று அழைக்கப்பட்டதும் தெரிந்து கொள்ள முடிகிறது.

நீங்கள் குன்றக்குடி சண்முகநாதரை தரிசிக்க சென்றால் இக்குடைவரைக் கோயில்கள் மட்டுமின்றி, இக்குடைவரைக் கோயிலின் மலைத் தளத்தில் சமணர் படுகைகளும், தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளதையும் பார்க்கலாம்.

கே.அன்பானந்தன்






      Dinamalar
      Follow us