/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி
/
அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி
அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி
அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி
PUBLISHED ON : ஜன 15, 2012

* பூமிக்கு ஒரு சூரியன் இருப்பது போல, கடவுளும் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சூரியனின் பிம்பம் தண்ணீரில் எல்லாம் பிரதிபலித்து பல சூரியன்களாகத் தெரிவது போல,ஒரு கடவுளே உலக உயிர்கள் அனைத்துமாக பிரதி பலித்துக் கொண்டிருக்கிறார்.
* மனிதன் மனம், வாக்கு, காயத்தின் (உடல்) கூட்டாக இருக்கிறான். மனதால் பகவானை நினைக்கவும், வாக்கால் அவன் திருநாமத்தை ஜெபிக்கவும், உடலால் அவன் திருவடிகளை வணங்கவும் வேண்டும்.
* எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்க ஒரே வழி தான் உண்டு. உண்மையாக இருக்கும் ஒருவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது தான். அந்த ஒருவன் கடவுள் மட்டும் தான்.
* சத்தியம், தரும சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம்ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. அப்போது நம்மிடம் தைரியம் குடி கொண்டிருக்கும்.
* ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. எளிமையையும், தூய்மையையுமே இறைவன் எதிர்பார்க்கிறார். காய்ந்த துளசியும், வில்வபத்திரமும் இருந்தால் கூட போதும்.
* அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இவை இரண்டும் மனதில் நிலைத்திருக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.

