sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

சூரியன் வழிபட்ட சிவாலயம்

/

சூரியன் வழிபட்ட சிவாலயம்

சூரியன் வழிபட்ட சிவாலயம்

சூரியன் வழிபட்ட சிவாலயம்


PUBLISHED ON : ஜன 15, 2012

Google News

PUBLISHED ON : ஜன 15, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரிய பகவான் இரண்டு மனைவியருடன் சிவனை வழிபட்ட தலம் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் . தஞ்சாவூர் அருகில் இந்தக் கோயில் உள்ளது.

தல வரலாறு: சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதன் காரணமாக பிரம்மா மிகுந்த அகந்தையுடன் இருந்தார். அதைப் போக்க, அவரது ஒரு தலையை சிவன் கண்டனம் செய்து (கொய்து) விட்டார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் கண்டனபுரம் என்ற தலம் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் 'கண்டியூர்' என மாறியது. சாதாதாப முனிவருக்காக, கயிலையிலிருந்து சிவனால் ஒரு வில்வமரம் கொண்டு வரப்பட்டது. இதனால் இத்தலத்திற்கு 'ஆதி வில்வாரண்யம்' என்று பெயர் ஏற்பட்டது. இந்த முனிவர் பிரதோஷத்தில், வான் மார்க்கமாக காளத்தி சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

ஒருமுறை காளத்திக்கு நேரத்தில் செல்ல முடியாமல் போனது.

அப்போது இறைவன் காளத்திநாதராக இந்த தலத்தில் காட்சியளித்தார். எனவே இதை 'தென் காளஹஸ்தி' என்றும் வழங்குகின்றனர். கல்வெட்டில் இவ்வூர் சிவனை, திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறித்துள்ளனர். பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர் என்ற பெயர்களே தற்போது இருக்கிறது.

தல சிறப்பு : சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரியபகவான் வழிபட்ட தலம். மாசி 13, 14, 15 மாலை 5.45 முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகிறது. நவக்கிரக சந்நிதியில் உள்ள சூரியபகவான் உஷா, பிரத்யுஷா என்ற மனைவியருடன் காட்சி தருகிறார். சிவனின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த அட்டவீரட்டத் தலங்களுள் இது ஒன்று. ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. மங்களாம்பிகை தெற்கு நோக்கி நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கிறாள்.

விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தண்டபாணி, மகாலட்சுமி, நடராஜர், விஷ்ணு துர்க்கை, பைரவர், விநாயகர், அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. சுவாமி கருவறை சுற்றுச்சுவரில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் உள்ளனர். சுவாமி சந்நிதி அருகில் பிரம்மா, சரஸ்வதி சந்நிதி இருக்கிறது. பிரம்மா பூ மற்றும் ஜபமாலை ஏந்தி பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ளார். அவரது தலையைக் கொய்த சிவன், வடுகர் (வடுக பைரவர்)வேடத்தில் பிரமன் சந்நிதி அருகில் உள்ளார்.

திறக்கும் நேரம் : காலை 6- மதியம் 1 , மாலை 4- இரவு 9.

இருப்பிடம் : தஞ்சாவூர்- திருவையாறு வழியில் 9 கி.மீ.






      Dinamalar
      Follow us