sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

நானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி

/

நானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி

நானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி

நானே நானா பேசும் 'மைனா' - நடிகை நந்தினி


PUBLISHED ON : ஜன 15, 2016

Google News

PUBLISHED ON : ஜன 15, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியேட்டர்களில் கைதட்டல் சத்தம் அதிர, காமெடியால் சிரிப்பு பூக்கள் உதிர, ரசிகர்களின் ரசனையில் ரெக்கை கட்டி பறக்கும் அழகுக் குதிரை, நடிப்பு கோட்டையில் வெற்றி கொடி கட்டிய நம்மூர் மதுர நந்தினி, 'நானே நானா பேசும் மைனா' என்ற, கெத்தான கேரக்டரில் டிவி தொடரில் கலக்கோ கலக்குன்னு கலக்கி வருகிறார். 'தினமலர்' பொங்கல் மலருக்காக இவருடன் ஒரு கலகல கலாய் பேட்டி இதோ...

* உங்களை பற்றி...

நான் ஒரு பக்கா மதுரை பொண்ணு. வக்போர்டு, அம்பிகா காலேஜ்ல தான் டிகிரி படிச்சேன்.

* எப்படி நடிக்க வந்தீங்க?

நடிக்குற அம்சம் இருக்குன்னு 'வம்சம்' படத்துல இயக்குனர் பாண்டிராஜ் வாய்ப்பு கொடுத்தாரு. அப்புறம் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'ரோமியோ ஜூலியட்', 'வெள்ளைக்கார துரை' படங்களில் நடிச்சேன்.

* சினிமா டூ டிவி...

முதல்ல 'டிவி' தொடர்ல நடிக்குற ஐடியாவே இல்லை. நடிச்சா ஹீரோயினா தான் நடிக்கணும்னு லட்சியமெல்லாம் இருந்துச்சு. டிவி தொடர்ல நண்பர் ரமணன் தான் நடிக்க வைச்சாரு. அது தான் இன்னிக்கு என்னை ஒரு நல்ல நடிகையா நடிப்பு உலகத்திற்கு கொண்டுவந்திருக்கு.

* இனி சினிமால நடிப்பீங்களா ?

என்ன இப்படி கேட்டுபுட்டீங்க, என் ரசிகர்கள் காமெடி கேரக்டர்ல நடிக்க சொல்றாங்க. அடுத்த கோவை சரளா, மனோரமான்னு சொல்லி ஓவரா உசுப்பேத்தி வேற விடுறாங்க. கெத்து கேரக்டர் கிடைச்சா கண்டிப்பா நடிப்போம்ல.

* மதுரை பாஷைல சும்மா பின்றீங்களே..

இதுல என்ன ஆச்சர்யம்? நம்மூர் பேச்சு நமக்கு வராதா என்ன? டிவி தொடர்ல வர என்னோட 'மைனா' கேரக்டர் என் அம்மா தான். ஆமா, அவுங்க எப்படி மதுரை பேச்சு பேசுவாங்களோ அதை தான் நான் பேசுறேன். இது மட்டுமில்லை நெல்லை, கோவை, கன்னியாகுமரி என பல ஊர் பாஷைகளும் எனக்கு அத்துப்படி.

* நடிக்க கிரீன் சிக்னல் எப்படி ?

என் அப்பா, அம்மா கிரீன் சிக்னல் தான் கொடுத்தாங்க. சொந்தக்காரங்க தான் ரெட் சிக்னல் போட்டாங்க. விண்ணை தாண்டி வந்த மாதிரி, சிக்னலை தாண்டி தான் நடிக்க வந்தேன். இன்னிக்கு சொந்த, பந்தமெல்லாம் என்னை பார்த்து பெருமைப்படுறாங்க.

* உங்களுக்கு பிடிச்ச காமெடி நடிகை?

கோவை சரளா, ஆரம்பத்துல இவங்க என்ன காமெடி பண்றாங்கனு எல்லாரும் சிரிக்குறாங்கன்னு நினைச்சேன். இப்போ என்னை பார்த்து ரசிகர்கள் 'கோவை சரளா'ன்னு சொல்லும் போது தான் புரியுது.

* காமெடி மட்டும் தானா...

காமெடி நடிகையா ரசிகர்களை சிரிக்க வைக்குறதுல ஒரு திருப்தி இருக்கு. ஆனால், எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால நடிக்க முடியும்.

* மதுரையும், பொங்கல் விழாவும்

மதுரை, பாரம்பரியத்தை போற்றும் பாசக்காரர்கள் நிறைந்த ஊர்ன்னு பெருமையா சொல்வேன். பொங்கலுக்கு முதல் நாள் விடிய, விடிய கலர் கோலம் போடுவோம். காலங்காத்தால மண் பானையில பொங்கல் வைச்சு சாமி கும்பிடுவோம்.

* பொங்கல் சபதம்?

புத்தாண்டுக்கு தான் சபதம் எடுப்பாங்க, பொங்கலுக்குமா? பொங்கி வரும் கோபத்தை குறைக்கணும்னு சபதம் எடுத்திருக்கேன்.

* அடுத்த ஆண்டு தலைப் பொங்கல் போல...

அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சா, நிச்சயதார்த்தம் முடிஞ்சது. கல்யாண வேலை நடந்துகிட்டு இருக்கு.

* எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை

தனுஷ், சிவகார்த்திகேயன் கூட கலகலன்னு காமெடி கேரக்டர்ல நடிக்கனும்.

* உங்கள் கனவு

என் வருங்கால கணவருடன் இணைந்து ஆரம்பித்த, 'வே பவுண்டேஷன்' மூலம் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதி கொடுத்தோம். எங்களுக்கு தனுஷ் நிதி கொடுத்து உதவினார். இது போல இன்னும் நிறைய சமூக சேவைகள் செய்யணும்.

nandhinimyna/facebook.com

ஸ்ரீனி






      Dinamalar
      Follow us