sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

அதிதியின் ஆசை

/

அதிதியின் ஆசை

அதிதியின் ஆசை

அதிதியின் ஆசை


PUBLISHED ON : ஜன 14, 2025

Google News

PUBLISHED ON : ஜன 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கஞ்சா பூ கண்ணால செப்பு சிலை உன்னால' என ரசிகர்களை கிறங்க வைத்தவர் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்துவிட்டு 'ஆக்டராக' வலம் வருபவர் தித்திக்கும் இந்த பொங்கலுக்கு 'நேசிப்பாயா' படத்துடன் தினமலர் பொங்கல் மலருக்கு அளித்த இனிப்பான பேட்டி...

பெண்களுக்கு சொல்ல விரும்புவது

நிறைய பெண்கள் தைரியமாக முன்வந்து பிரச்னைகளை பேசுறாங்க. பெண்கள் பாதுகாப்பாக இருக்கணும்.

நேசிப்பாயாவில் என்ன ஸ்பெஷல்

விஷ்ணுவர்தன் முதல் முறையாக படம் முழுக்க ஒரு காதல் கதையை இயக்கி உள்ளார். இந்தக்கால காதலர்களின் உறவு, எதிர்பார்ப்பு, பிரிவு எல்லாம் கலந்தது தான் நேசிப்பாயா. எனக்கு முதல் காதல் படம். பொங்கலுக்கு புது லவ் ஸ்டோரியை பார்ப்பீங்க. இந்த பொங்கலுக்கு அப்பாவின் கேம் கேஞ்சர், என் படம் ரிலீஸ் என இந்தாண்டு எனக்கு டபுள் ஸ்பெஷல்.

ஷங்கரின் மகள் என்ற அடையாளம் உதவுதா

ஷங்கரின் மகள் என்பது பெருமை. அவர் பெயரை வைத்து வாய்ப்பு பெறவில்லை. ஆடிஷன் சென்று வாய்ப்பு பெறுகிறேன். சினிமாவிற்கு வந்த பின் அப்பா மேல் மரியாதை கூடியிருக்கு.

அதிதியின் ஆசை

முழுமையான ஒரு வரலாற்று படத்தில் நடிக்கணும்.

அப்பா படத்தில் எப்போது நடிப்பீங்க

சீக்கிரமே நடக்கும், காத்திருக்கிறேன்.

புதுமுக நடிகருடன் நடித்தது

நான் புதுமுகமாக வந்தப்போ கார்த்தி, சிவகார்த்திகேயன் ஓகே சொன்னாங்க. அதுமாதிரி தான். விஷ்ணுவர்தன் படம் என்பதால் எதுவும் கேக்கல. ஆகாஷிற்கு இது முதல் படம் போலவே தெரியாது; நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.

டாக்டர்... ஏன்டா சினிமாவுக்கு வந்தோம்னு நினைத்தது உண்டா

சினிமாவில் ஜெயிக்கலாம், தோற்கலாம், நம் கையில் இல்லை; மக்கள் முடிவு பண்ணனும். படிச்சுட்டு 2 வருஷம் அப்பாகிட்ட டைம் கேட்டேன். சினிமா செட்டாகவில்லை என்றால் மேற்படிப்புக்கு போறேன்னு சொன்னேன். இப்போதைக்கு சரியாக போகிறது.

பணமா, கதையா அதிதியின் தேர்வு எது

காசுக்காக சினிமாவுக்கு வரல. கதை கேட்டு என்னை மறந்து அந்த காட்சியில் நான் இருந்தால் நடிப்பேன். கதையை நானும், என் மேனேஜரும் கேட்போம். எப்போதாவது அம்மா கேட்பாங்க. கடைசியாக அப்பாவிடம் செல்வேன்.

அடுத்தடுத்த படங்கள்

தமிழில் அர்ஜூன் தாஸ் படம், தெலுங்கில் சாய் ஸ்ரீநிவாஸ் உடன் ஒரு படம் நடிக்கிறேன். தெலுங்கில் கலர் புல்லா கிராண்டா எடுக்குறாங்க.

எப்பவுமே இப்படித்தான் துறுதுறுனு இருப்பீங்களா

என் குணம் இது தான், எப்பவும் இப்படித்தான் கலகலனு எனர்ஜியா இருப்பேன்.

விஜய் அரசியல் வருகை

அவருக்கு வாழ்த்துகள், அவ்வளவுதான்!

பிடித்த நடிகர், நடிகை

ரஜினி, நித்யா மேனன். ரீசென்ட்டா சாய் பல்லவி

உங்க வீட்டில் பொங்கல் பண்டிகை...

அம்மாவின் பொங்கல் எப்போதும் ஸ்பெஷல். குடும்பத்தோடு ஜாலியா பொழுது போகும். நானும் சமைப்பேன். அம்மா, பாட்டி சொல்லி தந்தது போக, யுடியூப் பார்த்து புது டிஷ் கத்துக்கிட்டேன்.

- கவிதா






      Dinamalar
      Follow us