sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

'மேக்கப்' விரும்பாத திவ்யா துரைசாமி

/

'மேக்கப்' விரும்பாத திவ்யா துரைசாமி

'மேக்கப்' விரும்பாத திவ்யா துரைசாமி

'மேக்கப்' விரும்பாத திவ்யா துரைசாமி


PUBLISHED ON : ஜன 15, 2024

Google News

PUBLISHED ON : ஜன 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எத்தனையோ பெண்கள் அழகாய் இருந்தாலும், அந்த அழகிற்கே பிடித்தவராக இருப்பதால் இளைஞர்களின் இதயத்தை வென்றவர். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன் படங்களில் தோழி, தங்கை கதாபாத்திரங்களில் நடித்து, 'குற்றம் குற்றமே ' படம் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த திவ்யா துரைசாமி தினமலர் வாசகர்களுக்காக நம்முடன் பகிர்ந்தது.

* பிறந்து, வளர்ந்தது

பெரம்பலுார். பள்ளி படிப்பு முடித்ததும் சென்னைக்கு பி.இ., படிக்க வந்தேன். கல்லுாரி முடித்ததும் சென்னையிலேயே வேலை கிடைத்தது. செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து தற்போது திரைப்படங்களில் ஹீரோயின் ஆகிவிட்டேன்.

* பொறியாளர்... எப்படி செய்தி வாசிப்பாளர்

பள்ளி முதலே வாசிப்பது, எழுதுவது என தமிழ் மீது ஆர்வம். கல்லுாரி முடித்து வேலை தேடும் போது தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி கிடைத்தது. பின் பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினேன்.

* நடிக்க துவங்கிய அனுபவம்

செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய போது நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிப்பில் எவ்வித தயக்கமும் இல்லாமல் திறமையை வெளிப்படுத்தினேன். நல்ல நடிகை என்ற பெயர் வாங்கியுள்ளேன் என நினைக்கிறேன்.

* பெற்றோர் ஒத்துழைப்பு

பி.இ., பட்டதாரி, செய்தி வாசிப்பாளர், நடிகை என துறைகள் பல மாறினாலும் பெற்றோர் ஒத்துழைப்பு இருப்பதால் எளிதாக நினைத்தை செய்ய முடிகிறது.

* நிறைவேறாத ஆசைகள்

பள்ளி படிக்கும் பொழுது சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. தந்தையிடம் அதைப்பற்றி கூறவில்லை. சொல்லியிருந்தால் வாங்கி கொடுத்திருப்பார். தற்போது டூவீலர், கார் என வாகனங்கள் இருந்தாலும் சைக்கிள் மட்டும் இல்லை.

* உடல்நலனை காக்க

தினமும் ஜிம் செல்வது, நடைப்பயிற்சி செய்கிறேன். நடைப்பயிற்சி செய்யவில்லை என்றால் அன்றைய தினம் முழுமையாக இருக்காது.

* உணவு பழக்க, வழக்கங்கள்

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்கிறேன். இரவு உணவை கண்டிப்பாக 7:00 மணிக்கு முன்பும், வாரத்திற்கு ஒன்று, இரண்டு முறை மட்டும் சாதம் உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.

* எந்த நடிகர்களுடன் நடிக்க விருப்பம்

குழந்தை பருவத்தில் இருந்தே விஜய் ரசிகை. தனுஷ் திறமையை கண்டு வியந்துள்ளேன். அஜித் நடிப்பு மிகவும் பிடிக்கும். இந்த மூன்று ஹீரோக்களுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

* 2024க்கு சபதம்

சபதம் என்று எதுவும் இல்லை. புதியதாக 3 படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சாதித்து காட்டுவேன்.

* சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான அட்வைஸ்

எல்லாருக்கும் திறமை உள்ளது. யாருடனும் திறமையை ஒப்பிட வேண்டாம். அவரவர் திறமையை வெளிப்படுத்தினால் சாதிக்க முடியும்.

* மேக்கப் இல்லாமல் நடிப்பதன் காரணம்

எல்லா படங்களும் கிராமத்து கதாபாத்திரங்கள் என்பதால் மேக்கப் போட அவசியம் ஏற்படவில்லை. முகத்திற்கு சன் ஸ்கிரின் மட்டுமே உபயோகித்து வருகிறேன். விரைவில் வர உள்ள வாழை படத்திலும் மேக்கப் இல்லை.






      Dinamalar
      Follow us