sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

சாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு

/

சாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு

சாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு

சாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு


PUBLISHED ON : ஜன 14, 2018

Google News

PUBLISHED ON : ஜன 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல உருவத்தில் சிறிதாக இருந்தாலும் குறுந்தானியங்கள் தான் நம் பாரம்பரிய செல்வங்கள் என்பதை அனைவருமே உணரத் துவங்கி விட்டோம். குறுந்தானியங்களில்தக்காளி சாதம் துவங்கி தயிர் சாதம், புளிச்சாதம், எலுமிச்சை சாதம், பிரியாணி வரை செய்யலாம். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

பொங்கல் ஸ்பெஷலாக இந்த முறை சாமை சர்க்கரை பொங்கல், குதிரைவாலி வெண் பொங்கல், பாரம்பரிய பச்சை மொச்சை சாம்பார் வைக்க கற்றுத் தருகின்றனர் இளைஞிகள். பெரியவர்கள் தான் கற்றுத் தர வேண்டுமா… நாங்களும் கற்றுத் தருவோம் என்கிறார் மதுரை தர்ஷினி.

சாமை சர்க்கரை பொங்கல்

தேவையானவை

சாமை அரிசி - அரை கிலோ

வெல்லம் - ஒரு கிலோ

நெய் - 100 கிராம்

பாசிபருப்பு - 100 கிராம்

பால் -100 மில்லி

ஏலம், சுக்கு, உப்பு - சிறிதளவு

முந்திரி, உலர் திராட்சை - விருப்பத்திற்கேற்ப.

செய்முறை : சாதாரணமாக அரிசியை களைந்த தண்ணீரை கீழே ஊற்றுவது வழக்கம். பொங்கலன்று மட்டும் அரிசி, பாசி பருப்பில் தண்ணீர் விட்டு களைந்து தண்ணீரை தனியாக வைக்க வேண்டும். பானையில் அரிசி களைந்த தண்ணீர், பால் ஊற்றி கொதிக்கவிடவும். பொங்கி வரும் போது அரிசி, பாசிபருப்பை கொட்டி அடி பிடிக்காமல்கிளற வேண்டும். கெட்டிப்பதம் வரும் போது அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். வெல்லத்தை துாளாக்கி சேர்க்க வேண்டும். வெல்லம் கரைந்ததும் ஏலம், சுக்கு, உப்பு, நெய் சேர்த்துகிளறவும். கடைசியாக முந்திரிபருப்பு, உலர்திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். வாசனையுடன் எட்டு ஊரை வா வா என்று அழைக்கும் இந்த சாமை சர்க்கரை பொங்கல்.

குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை

குதிரைவாலி அரிசி- அரைகிலோ

பாசிபருப்பு - 100 கிராம்

நெய் - 100 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு: கடுகு, உளுந்து, சீரகம்,

மிளகு, ஏலம், மிளகாய் வற்றல்,

பெருங்காயத்துாள், முந்திரிபருப்பு,

உலர் திராட்சை.

செய்முறை : பானையில் அரிசி,பருப்பு களைந்த தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட வேண்டும். கொதி வரும் போது அரிசி, பருப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளற வேண்டும். பச்சரிசி, புழுங்கல் அரிசியை விட குறுந்தானியங்கள் சீக்கிரம் வெந்து விடும் என்பதால் மித தீயில் வைத்து வேகவிட வேண்டும். சாதத்தில் தண்ணீர் இருக்கும் போதே நெய்யில் அனைத்தையும் தாளித்து சேர்க்க வேண்டும். கெட்டியான பின் இறக்கிவிடலாம். பொங்கலுக்கு இரண்டுமாதங்கள் முன்பாக வீட்டுத் தோட்டங்களில் அவரை, துவரை, மொச்சை பயறு வகைகளை விதைத்துவிடுவர். பாகல், சர்க்கரை பூசணி, புடல், வெள்ளை பூசணி, சுரைக்காய் கொடி வகை காய்களையும் விதைத்து விடுவர். அதை வைத்து பொங்கல் குழம்பு சமைப்பார்கள். இப்போதும் கிராமங்களில் இந்த நடைமுறை உள்ளது.

விளைந்த காய்கறிகளை கொண்டு விவசாயத்திற்கு நன்றி சொல்லும் வகையில் நாட்டு காய்கறிகளையும் இலையில் வைத்து சூரியனுக்கு படைப்பர். அதன்பின் அதை சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள். அனைத்து காய்கறிகளுடன் பச்சைமொச்சை குழம்பு செய்யக் கற்றுத் தருகிறார் மகாலட்சுமி.

பச்சை மொச்சை குழம்பு

தேவையானவை

துவரம் பருப்பு- அரை கிலோ

ஐந்து வித சுவையுடைய அனைத்து நாட்டு வகை காய்கறிகள், கிழங்கு வகைகள், பச்சை மொச்சை மொத்தமாக அரைகிலோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாம்பார் பொடி, மிளகாய் பொடி, உப்பு, புளி, தக்காளி, தேவைக்கேற்ப.

செய்முறை : பருப்பு மற்றும் கிழங்கு வகைகளை தனித்தனியாக வேகவைக்க வேண்டும். கிழங்கின் தோல் உரித்து வைத்தபின் பாத்திரத்தில் காய்கறிகள், கிழங்குவகைகள், தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும். கூடவே சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம், மிளகாய்பொடி சேர்த்து கொதிக்கவிடவேண்டும். நன்கு கொதித்து வரும் போது வேகவைத்த பருப்பை சேர்த்து தேங்காய், சீரகம் அரைத்து ஊற்ற வேண்டும். கடைசியாக இறக்கி வைப்பதற்கு முன்பாக புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பின் கடுகு, உளுந்து, வெந்தயம், வெங்காயம், பச்சைமிளகாய், பெருங்காயத்துாள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றினால் கமகமக்கும். பச்சைமொச்சை மற்ற காய்கறிகளை விட கொஞ்சம் கூடுதலாக சேர்ப்பது தான் பொங்கல் குழம்பின் சிறப்பே.






      Dinamalar
      Follow us