sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

விழா பிரியை

/

விழா பிரியை

விழா பிரியை

விழா பிரியை


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சக்கட்டு நிறத்தாலே இளசுகள் நெஞ்சுக்குளே மல்லுக்கட்ட பார்க்குறீயே... புல்லுக்கட்டு பார்வையாலே ஜல்லிக்கட்டு காளைகளை பூனைக்குட்டி ஆக்குறீயே... கரும்புக்கட்டு சிரிப்பாலே இனிப்பை அள்ளிகிட்டு நடக்குறீயே, நெல்லுக்கட்டு அசைவாலே ஆசையை கிளப்பிவிட்டு பறக்குறீயே...' என பார்த்ததும் கவி தெறிக்கும் அழகால் 'ஜீனியஸ்' படத்தில் அறிமுகமான பிரியா லால் தினமலர் பொங்கல் மலருக்காக மனம் திறக்கிறார்...

* முதல் படமே வெயிட் கேரக்டர் ?

நானே எதிர் பார்க்கல! இயக்குனர் சுசீந்திரன் 10 நிமிஷம் தான் கதை சொன்னார். அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட் போன பிறகு தான் முழு கதையும் எனக்கு தெரிஞ்சது. ஆனால் அவர் படங்களை நிறைய பார்த்து அவர் ஸ்டைலை உள்வாங்கி நடித்தேன்.

* உங்களுக்குள் நடிகையை உணர்ந்தது?

சின்ன வயசிலிருந்தே எனக்கு சினிமா மேல் தீராத காதல் இருந்தது. மலையாளத்தில் 'ஜனகன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்த பின் தான் எனக்குள்ளே இருக்கும் நடிகை வெளிவந்தாள்.

* கொச்சின் பிரியா கொஞ்சும் தமிழில் பேசுவது எப்படி?

தமிழ் பேச ரொம்ப பிடிக்கும்... என்னமோ தெரியலை போன ஜென்மத்தில் தமிழ் பொண்ணா பிறந்திருப்பேன் போல. அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் தரமான கதைகள் வருது, நம் திறமையை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம்.

* மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது ?

எனக்கு சுத்தமா மேக்கப் பிடிக்காது... ஒவ்வொரு ஆண், பெண்ணுக்கும் இயற்கையே அழகை கொடுத்திருக்கு; அது தான் நிரந்தரமான அழகு. அதனால், நடிக்கும் போது தான் மேக்கப் பண்ணிக்குவேன். வெளியே போகும் போது மேக்கப் பண்றதில்லை.

* மலையாளத்தில் நடித்த படங்கள் ?

இதுவரை நான் தமிழ், மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ளேன். மாநில, தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் அனில் ராதா கிருஷ்ணன் மேனன் இயக்கிய 'லார்டு லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

* சினிமா தொழில்நுட்பத்தில் ஆர்வம் ?

நான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தேன். அங்கே தான் பி.டெக் மீடியா புரடக்ஷன் படித்தேன். அதனால், நான் நடிக்கும் படங்களில் இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறேன். இந்த படிப்பு நடிப்பிற்கும் உதவியாக இருக்கிறது.

* உங்கள் நடிப்பில் அடுத்த படங்கள் ?

அடுத்து தெலுங்கு படம் ஒண்ணு ரிலீஸ் ஆகுது. மலையாளத்திலும் நடிக்கிறேன். தமிழ் சினிமாக்களின் கதைகளும் கைவசம் இருக்கு.

* பொங்கல் விழா கொண்டாட்டம் ?

விழாக்கள் மேல எனக்கு ஓவர் பிரியம்... எந்த விழா வந்தாலும் செம குஷியாகி விடுவேன் இங்கிலாந்தில் தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடி இருக்கேன். இந்த முறை 'விஸ்வாசம்', 'பேட்ட' படங்களை ரசிகர்களுடன் பார்த்து பொங்கல் கொண்டாட போறேன். தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

- பிரியா லால்






      Dinamalar
      Follow us