sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

தரணி போற்றும் தைமகளே வருக!

/

தரணி போற்றும் தைமகளே வருக!

தரணி போற்றும் தைமகளே வருக!

தரணி போற்றும் தைமகளே வருக!


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உதயமாகும் சூரியனை வழிபடுவதே சூரிய நமஸ்காரம். இதுவே முதல் வழிபாடு.

கண் கண்ட தெய்வம்

பறவை, விலங்கு என எல்லா ஜீவராசிகளும் இருளைக் கண்டு பயப்படுகின்றன. பொழுது புலர்ந்ததும் மகிழ்ச்சியில் பறவையினங்கள் கீச்சிடுகின்றன.

சோம்பல் முறித்து இரை தேடப் புறப்படுகின்றன.

காட்டில் அலைந்த ஆதிமனிதனுக்கும் ஒவ்வொரு நாள் இரவும் யுகமாக கழிந்தது. பொழுது புலர்ந்ததும் கீழ்வானில் சூரியன் உதித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சியுடன் வழிபட்டான். பயம் போக்குபவராகவும், உழைப்பின் சின்னமாகவும், வாழ்வின் ஆதாரமாகவும் சூரியபகவான் விளங்குகிறார். சங்கு, சக்கரம், கதாயுதம், அபயஹஸ்தம் கொண்டவராக புராணம் இவரை சித்தரிக்கிறது. அபயஹஸ்தம் என்பதற்கு 'பயம் போக்குவது' என்பது பொருள். எல்லா தெய்வங்களுக்கும் அபயஹஸ்தம் இருந்தாலும், கண் கண்ட தெய்வமான சூரியனுக்கு இருப்பதே மிகப் பொருத்தம்.

நவக்கிரக நாயகன்

எதிர்கால வாழ்வை அறிய ஜோதிடம் வழிகாட்டுகிறது. ஒருவரின் பிறந்த நேரத்தில் இருந்த கிரகங்களின் நிலையைக் கொண்டே பலன் கூறுவர். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என எல்லா நிலைகளிலும் கிரகங்களின் போக்கே காரணம். நவக்கிரகங்கள் ஒன்பதிலும் நாயகனாக திகழ்பவர் சூரியனே.

நட்சத்திரங்களில் ஒன்று சூரியன் என அறிவியல் கூறினாலும், ஜோதிடத்தில் சூரியன் கிரகமாகக் கருதப்படுகிறார். சிம்மராசியின் அதிபதியான சூரியன், மேஷத்தில் இருக்கும் போது உச்சபலம் பெறுகிறார். இக்கால கட்டத்தை 'அக்னி நட்சத்திரம்' என்பர். பிறந்த ஜாதகத்தில் சூரியனின் நிலையை பொறுத்து ஒருவரின் உடல்நலம், ஆன்ம பலம், அரசுப்பதவி, ஆன்மிக பலம் அமையும். நட்பு கிரகங்களான குரு, சந்திரன், செவ்வாயை சூரியன் பார்த்தாலோ, சேர்ந்தாலோ நன்மை அதிகரிக்கும்.

கவலை போக்குபவர்

சூரியனை வணங்கினால் நோய் தீர்ந்து ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆயுள் பெருகும் என்பது விதி. இது தவிர, தேவையற்ற இடத்திற்கு பணி காரணமாகவோ, பிற காரணங்களாலோ மாறிச் செல்ல நேருமோ என வருந்துபவர்கள், நீண்டகால நோயால் அவதிப்படுபவர்கள், பாடுபட்டு சேர்த்த பணம் விரயமாகும் நிலை உள்ளவர்கள், பார்வை இழக்கும் நிலையில் இருப்பவர்கள், குற்றம் புரியாமல் வழக்கில் சிக்கியவர்கள், பலனின்றி பயணம் செய்பவர்கள், கடன் தொல்லையால் சொத்தை இழந்தவர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு சூரிய வழிபாடு மிக உகந்தது. இவர்கள் ஞாயிறன்று சூரியனை வழிபட்டு வர பிரச்னை தீரும்.

தைமகளே வருக

சூரியன் மாதம் ஒரு ராசியில் தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் மாதம் சித்திரை. அதுபோல மகர ராசியில் நுழையும் மாதம் தை. இதன் அடிப்படையில் சித்திரை விஷூ, துலாமில் ஐப்பசி விஷூ, மகரத்தில் மகர சங்கராந்தி நாளான பொங்கல் மூன்றும் சிறப்பு மிக்கவை.

'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்பதற்கு 'மாறுதல்' எனப் பொருள். 'சங்' என்றால் 'நல்ல முறையில்' என பொருள். 'நல்ல முறையிலான மாற்றம்' என்பதை சங்கராந்தி என்கிறோம். இதனடிப்படையில் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்களும் உத்ராயண புண்ணிய காலம் எனப்படும். இந்த நன்னாளில் 'தரணி போற்றும் தைமகளே வருக' என பொங்கலை வரவேற்போம்.






      Dinamalar
      Follow us