sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

தெய்வமான கோயில் காளை

/

தெய்வமான கோயில் காளை

தெய்வமான கோயில் காளை

தெய்வமான கோயில் காளை


PUBLISHED ON : ஜன 14, 2017

Google News

PUBLISHED ON : ஜன 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளை வளர்க்கும் கிராமங்கள், தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே உள்ள கே.புதூரில் மறைந்து போன கோயில் காளையை, பல ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள், தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த ஊரில் உள்ள பகவதியம்மன் கோயில் விழா, சில காரணங்களால் கொண்டாடப்படாமல் இருந்தது.

இதற்கு மாற்றாக பழநி சண்முகநதி பகுதியில் கண்டெடுத்த விநாயகர் சிலையை கொண்டு வந்து, ராஜகணபதி என்ற கோயிலை உருவாக்கினர்.

கோயிலுக்கென 1986ல் காளை வாங்கி வளர்த்தனர். இந்த காளைக்கு மூக்கணாங் கயிறு மாட்டுவதில்லை.

கிராமத்தை சேர்ந்த அனைவரது தோட்டங்களிலும் தீவனத்துக்காக வலம் வரும். யாரும் அதை விரட்ட மாட்டார்கள்.

இக்காளை மூலம் பிறக்கும் கன்றுகள் ஆரோக்கியம், வீரியமிக்கதாக இருக்கும். இக்காளை வந்த பிறகு முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்ற நம்பிக்கை இம்மக்களிடம் உள்ளது.

சிறு குழந்தைகள் கூட இதன் அருகே பயமின்றி செல்லும் அளவிற்கு சாதுவானது.

அதே சமயம் சலங்கை கட்டி ஜல்லிக்கட்டில் களம் இறங்கினால் புலியென சீறிப்பாயும். வாடி வாசலில் இருந்து வெளியே வந்ததும் வாயிலிலேயே நின்று விளையாடும்.

மதுரை மாவட்டம் மேலவளவு மஞ்சு விரட்டில் 'இதுவரை பிடிபடாத காளை' என்ற பெருமையை பெற்றுள்ளது.

இவ்வூர் பிரமுகர் மருதப்புலி கூறியதாவது: இக்காளை முட்டி எவரும் உயிரிழந்ததில்லை. கடந்த 2001ல் வயது முதிர்ச்சியால் இயற்கை எய்தியது. இதன் இறுதிச் சடங்கின் போது அலங்காரம் செய்து, மனிதர்களைப் போலவே நல்லடக்கம் செய்தோம். 2வது காளை தற்போது உள்ளது. இருப்பினும் கோயில் அமைத்தபின் முதல் காளை என்பதாலும், இறந்து விட்டதாலும் அதனை தெய்வமாகவே நினைக்கிறோம்.

ராஜகணபதி கோயில் அருகில், அடக்கம் செய்த இடத்தில் சிலை அமைத்துள்ளோம். இப்பகுதியில் இதன் வாரிசுகள் அதிக அளவில் உள்ளன.

வாரிசுகளாக உள்ள பசுக்கள் கன்று ஈன்றால் அதன் 'சீம்பாலை' முதலில் ராஜகணபதி காளைக்கு அபிஷேகம் செய்த பின்னரே பயன்படுத்துவோம்.

மாட்டுப் பொங்கலன்று, இதன் வாரிசுகளை வளர்ப்போர், இக்காளை சிலைக்கு மாலை அணிவித்து, வேட்டி, துண்டு செலுத்தி வழிபடுகின்றனர். விரைவில் மணி மண்டபம் கட்ட உள்ளோம், என்றார்.

டி. குமாரவேல்






      Dinamalar
      Follow us