/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
நேரமே உலகம்! "நல்ல நேரம்' தரும் அதிசய கோயில்!
/
நேரமே உலகம்! "நல்ல நேரம்' தரும் அதிசய கோயில்!
PUBLISHED ON : ஜன 14, 2014

நேரம் பொன்போன்றது, பூ போன்றது என்றெல்லாம் நேரத்தின் மதிப்பையும், பெருமையையையும், வாழ்வியல் நெறிமுறைகளோடு பின்பற்றி வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
இருபத்தி நான்கு மணி நேரத்தையும், கூட்டி, கழித்து நல்லது, கெட்டது எது என காலக்கணக்கையும் படைத்து, விஞ்ஞானம் தலைதூக்காத காலத்திலேயே வழிகாட்டினர்.
விஞ்ஞானம் ஆயிரம் வடிவங்களில் உயர்ந்து சென்றாலும், ஒருவனின் நேரத்தை இந்த விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது. அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா? அதுவும் நம்மூரில்!
அந்த கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் உள்ளது. கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் ' நேரமே உலகம்'.
புராணங்களில் வரும் காலராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு. நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியும், என்பது தான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்று தானோ?
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். காலதேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது. கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். கெட்ட நேரம் அகன்று நல்ல நேரம் வரும் என்பது தான் இக்கோயிலின் நம்பிக்கை.
குருஜியான சுவாமி தாசன் சொல்கிறார்...
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும்போது, எனக்கு அதை கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல், 'எனக்கு எது நல்லதோ அதைக் கொடு' என வேண்டினால் போதும்.
ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ளேன். இளமையில், கடவுள் நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்தவன். எனது கஷ்டங்களுக்காக நான் இந்தியாவில் செல்லாத கோயில்கள் இல்லை. ஆன்மிக தேடல்களின் கடைசியாக நான் கண்டுபிடித்த உண்மை தான் இந்த காலதேவி. கோயில் பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, இப்போது இது இறுதி வடிமாக 2006ம் ஆண்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கஷ்டங்களால் அவதிப்படுவோர் தான் இக்கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களின் மனங்களில் நம்பிக்கையையை விதைக்கிறோம். அது அவர்களுக்குள் மாற்றங்களை கொடுக்கிறது, என்கிறார்.
நேரக்கோயில் தகவல்களுக்கு 94421 73049 அழுத்தலம்.
-வின்
-கண்

