
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவருடைய கை விரல் ரேகையை போல, இன்னொருவருடைய ரேகை அமையவே அமையாது.
இதில், இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், பிறப்பிலிருந்து இறப்பு வரை, நம் உடலில், எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஆனால், மாறாமலே இருக்கிற ஒன்று, கை விரல் ரேகைகள் தான். இந்த காரணத்துக்காகவே, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு, காவல் துறையினர், கை விரல் ரேகைகளையே பெரிதும் நம்புகின்றனர்.

